கால் கொண்ட புயல்தான் என்பாரா அக் கண் ரெண்டும் தீப்பந்தம் என்பாரா கறு வானிலே பெருஞ் சுடரா உதிக்கும் புலர்தான் என்பாரா ஹே தீயோர் அஞ்சிடும் பேரா ஹே சீறிப் பாயும் போரா அம் மரணமே என்றும் நேரா உணர்வின் பேர்தான் சம்ஷேரா தூசியாய் உன்னை மாற்றுவான் ஃபூ ஊதுவான் நீ மோதிடப் பார்த்தால் உன் கண்ணைக் கட்டுவான் காற்றாகுவான் நீ பிடித்திடப் பார்த்தால் அவன் வழியில் இருக்கும் தடையெல்லாம் ஒரு நொடியினிலே பொடியாகும் அவன் திருடும் பொருள்கள் சில திருடும் இதயம் பல இதயங்கள் அவன் பேர் பாடும் ஹே தீயோர் அஞ்சிடும் பேரா ஹே சீறிப் பாயும் போரா அம் மரணமே என்றும் நேரா உணர்வின் பேர்தான் சம்ஷேரா