பாராய் நரசிம்மா நீ பாராய் உனக்காய் கூடும் கூட்டம் பாராய் கேளாய் நரசிம்மா நீ கேளாய் எங்கள் நெஞ்சில் உந்தன் பேரைக் கேளாய் உன்னால் மண்ணில் இன்பம் பரவிட வான் எங்கும் தீபம் சுடர்விட ஒன்றாக வணங்குகிறோமே ♪ ஓ சைரா ♪ அடித்திட வானே நம் பறையோ நாம் ஆட மேடை இத் தரையோ நம் அண்டம் எங்கும் புன்னகையோ நம் நெஞ்சம் எல்லாம் வாசனையோ திசையெல்லாம் தாளம் அள்ளி வீசும் தேசம் ஓராயிரம் இன்பம் நாளும் முளைத்திடும் தேசம் எம் பானைகளாக பொங்குவதெம் உல்லாசம் அவ்வான் முழுதும் இம்மண் முழுதும் இனி எங்கள் வசம் தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா இம் மண்ணினைக் காத்திட வந்தாரா ஹே இம் மண்ணினைக் காத்திட வந்தாரா ♪ என் யாக்கைக்குள்ளே நீங்கள் எல்லாம் எந்தன் உயிர்தானே இந்த மண்ணுக்குத்தான் எந்தன் வாழ்க்கையென எனை நான் கொடுப்பேனே உங்கள் இன்பத்தில் வாழ்வேனே நான் மறைந்தாலும் உங்கள் இன்பத்தில் என்றென்றும் வாழ்வேனே என் நேற்றின் சாட்சி முதியவர் விழிகள் பேசும் முழு வாழ்க்கையின் சாரம் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் என் நாளையின் சாட்சி சிறுவர் கண்கள் பேசும் அவர் கண்களிலே எதிர்காலமது ஏ மின்னிடுமே தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா இம் மண்ணினைக் காத்திட வந்தாரா ஹே இம் மண்ணினைக் காத்திட வந்தாரா ♪ தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா இம் மண்ணினைக் காத்திட வந்தாரா இம் மண்ணினைக் காத்திட வந்தாரா