Amitabh Bachchan - Angam Unnidam lyrics
Artist:
Amitabh Bachchan
album: Syeraa Narasimha Reddy
அங்கம் உன்னிடம்
நெஞ்சம் உன்னிடம்
மஞ்சம் யாவிலும்
உந்தன் காவியம்
உன் வெண்மைக்கு நிகராக
அவ்வானில் நிலவுண்டா
உன் மென்மைக்கு நிகராக
இந்த மண்ணில் பூவுண்டா
மின்னாலினா...
என்னாலினா...
அங்கம் உன்னிடம்
நெஞ்சம் உன்னிடம்
வான்மீன்கள் வீழும் வானில்
நீயே கண்ணிலா
நானோ நானும் வெண்ணிலா
உன்னாலே எந்தன் விழியில்
மறையா மின்னலா
ஏனோ சொல்லாய் காதலா...
உந்தன் செவ்வான நெஞ்செங்கும்
சில தீபம் நான் ஏற்ற
அந்த வெப்பத்திலே கொஞ்சம்
குளிர்காய்ந்தே இளைப்பாற
மின்னாலினா...
என்னாலினா...
அங்கம் உன்னிடம்
நெஞ்சம் உன்னிடம்
மஞ்சம் யாவிலும்
உந்தன் காவியம்
தகதின தகதின தரதின தீனா
இதயத்தில் இதயத்தில் தில்லானா
மகிழுது சுழலுது ஒளிருது வானம்
கதிரவன் இரகசியம் சொல்வானா
தகதின தகதின தரதின தீனா
இதயத்தில் இதயத்தில் தில்லானா
நரம்புகள் அதிர்ந்திட இசையினில் நெஞ்சம்
விரல்களில் அவன் உனைத் தொட்டானா
கனவில் நனவில் உடலில் உயிரில் இணைந்தானா
Поcмотреть все песни артиста
Other albums by the artist