Kishore Kumar Hits

A.R. Rahman - Kodi Parakura Kaalam lyrics

Artist: A.R. Rahman

album: Maamannan (Original Motion Picture Soundtrack)


பிச்சிப் பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தம் கண்ட பூ காடாம் காடாம்
வச்சப் பூவும் வாடிருச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதாண்டி
ஹாம்
வாடக் காத்து இழுக்குதடி வாச தாண்ட முடியலடி
வாடக் காத்து இழுக்குதடி வாச தாண்ட முடியலடி
என்ன செய்வேன்? நான் என்ன செய்வேன்?
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்?
ஏன் ஒண்டி வீரன் இல்லாம
என்ன செய்வேன்?

காட்சி கருங்காடாம் காலெல்லாவும் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் தேகம் எங்க போச்சு?
நீ ஒடச்சு கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்
ஒத்தச்சி எந்திறி இங்க ஒண்டி வீரன்
நீதாண்டி நீதாண்டி நீதாண்டி நீதாண்டி தாண்டி தாண்டி தாண்டி
நம் கொடி பறக்குற காலம் வந்தாச்சு (வந்தாச்சு)
வெற்றி வெடி வெடிக்குற நேரம் வந்தாச்சு
நம் கொடி பறக்குற காலம் வந்தாச்சு (வந்தாச்சு)
வெற்றி வெடி வெடிக்குற நேரம் உண்டாச்சு
பொத்தி வச்ச கோபத்த நீ நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த உதையில் உலகத்த நீ உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ (ஓஓஓ)
ஓரம் போ (ஓஓஓ)
தோல்வி இல்ல துணிஞ்சாலே, எது எல்லை?
எட்டுது வானமும் எட்டுது
எட்டுது வானமும் எட்டுது

வெட்டிக் கத தேவையில்ல
வெக்கம் கெட்டா ஒன்னுமில்ல
சொட்டாங்கள்ளு பொட்டப்புள்ள
சொரன கெட்டா குத்தமில்ல
பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதப்பாங்க
அங்க இங்க மொளச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
நான் வப்பேனே ஒப்பாரி ஓரம் போடி நீ
புழுதிக் காட்டுக்குள் பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட?
தடைய தாண்டிச் செல்ல
அலைய மோதி தல்ல
கண்ணே நீ போடனும் சண்ட
பழைய பழைய பாட்ட திருப்பித் திருப்பிப் போட்டு
பன்னாத பன்னாத சேட்ட
ஒரு மந்திரம் தந்திரம் இல்ல
இந்திரன் சந்திரன் இல்ல
வந்துரு வந்துரு வந்துரு யாருனு காட்ட
நம் கொடி பறக்குற காலம் வந்தாச்சு (ஆமா போடு)
வெற்றி வெடி வெடிக்குற நேரம் வந்தாச்சு
நம் கொடி பறக்குற காலம் வந்தாச்சு (வந்தாச்சு)
வெற்றி வெடி வெடிக்குற நேரம் உண்டாச்சு
பொத்தி வச்ச கோபத்த நீ நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த உதையில் உலகத்த நீ உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ (ஓஓஓ)
ஓரம் போ (ஓஓஓ)
தோல்வி இல்ல துணிஞ்சாலே, எது எல்லை?
எட்டுது வானமும் எட்டுது
எட்டுது வானமும் எட்டுது

ஓரம் போ (ஓஓஓ)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists