Kishore Kumar Hits

A.R. Rahman - Veera Raja Veera lyrics

Artist: A.R. Rahman

album: Ponniyin Selvan


காணீரோ?
நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ?
ஓ அழகிய பூவே!
செல்லுதியோ?
மலரிடு போ சகி!

வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
பாவோர் போற்றும் வீரா
உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர

விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
ஆ-ஆ-ஆ

ஆ-ஆ-ஆ-நானாஆ
விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
வீரா ராஜ வீர
சூரா தீர சூர

ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்
சர சர சர சரவெனவே மழை தான் பெய்திட
பர பர பர பரவென பாயட்டும் பாய்மரம்
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்
எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்
புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்
அடடா பெரும் வீரா!
எடடா துடி வாளை!
தொடடா சரமாலை!
அடடா பகை ஓட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
வீரா!

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists