அக்கா அக்கா, தீபாவளின்னா என்னக்கா? அந்த பண்டிகைய நாம எதுக்கு கொண்டாடறோம்? அதுவா கண்ணா, இதோ உனக்கு தீபாவளி கதைய சொல்றேன், கேளு (ஹோ ஹோ) (ஹோ ஹோ) (ஹோ ஹோ) (ஹோ ஹோ) அசுர அசுர அசுரா நரகாசுரா (ஹோ ஹோ ஹோ ஹோ) அசுர அசுர அசுரா நரகாசுரா (ஹோ ஹோ ஹோ ஹோ) அசுர அசுர அசுரா நரகாசுரா (ஹோ ஹோ ஹோ ஹோ) அசுர அசுர அசுரா நரகாசுரா (ஹோ ஹோ ஹோ ஹோ) ♪ நரகாசுரன் என்றொருவன் தீமைகள் பலவும் செய்தானாம் தேவர்கள் மோதியும் பயனில்லை அவனை வெல்வார் எவரும் இல்லை தேவர்கள் அனைவரும் ஓடிவந்தே கடவுளின் பாதம் சரணடைந்தே அசுரனை அழித்தே ஹே கிருஷ்ணா எங்களைக் காப்பாய் ஸ்ரீ கிருஷ்ணா என்றே கடவுளைச் சரணடைந்தார் கடவுளும் ஏற்று வரமளித்தார் ♪ நல்லோர் வாழ்வை காப்பதற்கும் தீய அசுர குலத்தை ஒழிப்பதற்கும் கடவுள் கிருஷ்ணனாய் அவதரித்தார், பல அரக்கரின் வாழ்வை முடித்து வைத்தார் ♪ போரில் அசுரனை எதிர்க்கொண்டு சத்யபாமாவின் துணைகொண்டு நரகாசுரனை அழித்தாரே, இந்த உலகையெல்லாம் காத்தாரே ♪ அசுரன் என்ற இருள் நீங்கி நன்மை என்னும் ஒலி பொங்கி தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இறைவனை என்றும் வணங்கிடுவோம் மக்களை இணைக்கும் தீபாவளி மங்கலப் பண்டிகையாம் தீபாவளி சிறுவர்கள் விரும்பும் தீபாவளி சிங்காரப் பண்டிகையாம் தீபாவளி உலகே கொண்டாடும் தீபாவளி உண்மைத் திருநாளாம் தீபாவளி எல்லா மனமும் இணைந்துவிட்டால் எல்லா நாளும் தீபாவளி