மின்னி மின்னி கண்கள் மின்னி உன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன் திக்கித் திக்கி ஒன்று சொல்ல ஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனே பூந்தென்றல் போலே வழியெங்கிலும் உன் ஞாபகம் வரும் ♪ என்று நான் உன் முகம் பார்த்து சொல்வேனோ அன்று என் இரவுகள் மெல்ல நீளாதோ கைகளை கோர்க்கவே உள்ளில் ஏங்கினேன் ஆருயிரே ம்-ம் உன் விரல் கோர்க்கிறேன் மின்னல் வீசுமே உன் குரல் யாவுமே பாடல் ஆகுமே பிஞ்சிளம் நெஞ்சு போல் உள்ளம் துள்ளுதே கனவா நினைவாய் மின்னி மின்னி கண்கள் மின்னி உன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன் திக்கித் திக்கி ஒன்று சொல்ல ஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனே ♪ கண் மையை கூடத்தான் நான் தவிர்க்கின்றேன் கால் விரல் மண்ணிலே கோலம் போடுதே என்னுள்ளே பொன்மயில் தோகை வீசிதான் ஆடுதே நீ வரும் வீதியில் நான் நிற்கின்றேன் சிவக்கும் கண் கோவமும் ரசிக்க தோன்றுதே உந்தன் கண்ணாடியாய் மெல்ல மாறினேன் மாயமா சொல்லு மின்னி மின்னி கண்கள் மின்னி உன்னைச் சுற்றும் பறவை போல் நான் இருப்பேன் திக்கித் திக்கி ஒன்று சொல்ல ஒற்றை ஆளாய் நான் காத்து நிற்பேனே பூந்தென்றல் போலே வழியெங்கிலும் உன் ஞாபகம் வரும்