காலம் ஒரு துரோகி ♪ படுபாவி பிசினாறி நேரம் ஒரு நோய் பிரபஞ்சம் சூழும் போய் சுதந்திர வெளியிலே நொடிகள் கூடிப்போடும் சதியிலே நேரம் நதியாய் நுரைத் தள்ளித் துள்ளி ஓடுமே ஆனால் கைதியாய் சிறையிலே ஓடு ஓடு என்று உந்தியும் சிலைப் போல் மழைப் போல் துடிக்கும் மீனை அடக்கும் வலைப் போல் அசராத காலம் ஒரு துரோகி படுபாவி பிசினாறி நேரம் ஒரு நோய் பிரபஞ்சம் சூழும் போய் தனிமையில் மனத்திரையிலே வந்து ஆடிய எண்ணங்கள் மனதின் கூவல் செவியிலே எட்டிப்பாடிய தருணங்கள் என் குரல் மறந்து தொண்டை மறத்து வெளியே நோக்கிய கோவம் உள்பாய என்னை மீறி எந்தன் எண்ணம் உணர்வு கலத்தை ஆராய சின்னஞ்சிறு ஆசையெல்லாம் சிறையிலே சுட்டுப் புதைத்தேன் எண்ணிய கம்பி எடுத்து நானே என்னைத் தண்டித்தேன் என்னைப் போல மிருகம் ஒன்றைக் கண்டதில்லை அதுவரை நான் மிருகத்துக்கு தீனியாக தனிமையில் நான் மட்டும் தான் அகம் மன அரக்கனை ஆதரித்து ஆளவிட்ட பின் இதயத்தின் இறைவனை ஈவிறக்கம் ஈயவேண்டியே யுகங்கள் தாண்டும் நொடிகள் சொடுக்கி, நொறுக்கி, விடுவிக்கப்பட்டும் நினைவில் நிழலாய் நிற்கும் உலகம் நிஜத்தில் அழிக்கப்பட்டும் துண்டித்த பாசக்கயிர் நூல்கொடியாய் காற்றில் ஆடும் தசையில் என் மன விசையும் இழுக்க காலம் ஒரு துரோகி படுபாவி பிசினாறி நேரம் ஒரு நோய் பிரபஞ்சம் சூழும் போய் இல்லம் தேடும் உள்ளம் எதிரி புது கோரைப்பல் கர்ஜிக்கும் உலகம் எதிரி பயன் இழந்த அடிமை மனம் அதுக்கு ஆறுதல் சொல்ல அன்பும் இல்லை பலம் இழந்த அதிகாரத்துவம் அதுக்கு சாட்டை வீசத் தெம்பும் இல்லை கேட்க மன்னிப்பு பாக்கி இருக்கு குடுக்க நன்றி கோடி இருக்கு இது இரண்டுக்கும் நேரம் இருக்கு அவை நோக்கி புழுதியில் தேயும் செருப்பு என் செருக்கு காலம் ஒரு துரோகி படுபாவி பிசினாறி நேரம் ஒரு நோய் பிரபஞ்சம் சூழும் போய்