கண்ணபுர நாயகியே மாரியம்மா...
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா...
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா, அம்மா!
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
கண் திறந்து பார்த்தாலே போதுமம்மா
எங்க கவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா, அம்மா!
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
♪
உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்
பம்பை உடுக்கையோடு உன் மகிமை பாடி வந்தோம்
பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும், அம்மா!
பச்சிலையில் தேரெடுத்து வரவேண்டும்
உன் பக்தருக்கு வேண்டும் வரம் தரவேண்டும்
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
♪
வேப்பிலையால் நோயெல்லாம் தீர்த்திடுவாய்
மனவேதனையை திருநீரில் மாற்றிடுவாய்
காப்பாற்ற சூலம் அதை ஏந்திடுவாய்
தினம் கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா, அம்மா!
♪
மலையேறும்தாய் உனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலிட்டோம்
மலையேறும்தாய் உனக்கு கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலிட்டோம்
உலகாளப் பிறந்தவளே அருள் தருவாய்...
உலகாளப் பிறந்தவளே அருள் தருவாய்
எங்க வீடெல்லாம் பால் பொங்க வரம் தருவாய்...
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
கண் திறந்து பார்த்தாலே போதுமம்மா
எங்க கவலை எல்லாம் மனச விட்டு நீங்குமம்மா, அம்மா!
கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா
Поcмотреть все песни артиста
Other albums by the artist