மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு கேட்டு நீ ஏட்டு பந்த பாசம் காட்டு குயிலுக்கு வாத்தியாரு நான் (மாமா நீ.) நான் பாடப் பாட ஊரே தூங்காதா ஹோ நீ பாடி பாரு மூச்சு வாங்காதா ஹோ எட்டு கட்டை ஏறி பாடுவேன் (மாமா நீ.) நேற்று என் வானம் மழை தர வில்லை ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை அரண்மனை வாசல் தாண்டி நான் அன்புக்கு ஏங்கினேன் உன்னிடம் சேர்ந்த பின்புதான் சொர்கத்தை வாங்கினேன் எனக்கிந்த சொந்தம் போதுமே ஆ (மாமா நீ.) எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன் நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன் நிழலினை போலே உன்னுடன் நடப்பேன் உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன் இதுவரை வாழ்ந்த வாழ்விலே கனவுகள் இல்லையே இனி எந்தன் பாதை யாவிலும் நீதான் எல்லையே நீ இன்றி சொந்தம் இல்லையே ஆ (மாமா நீ.)