Kishore Kumar Hits

Sirpy - Naan Vaanavillaiyae lyrics

Artist: Sirpy

album: Moovendar (Original Motion Picture Soundtrack)


ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோஹொ ஒஒ

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன
மயிலும் நடனமிடுமோ?
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ
கண்கள் ஆகிவிடுமோ?
தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழோ?
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி
மீட்க என்ன வழியோ?
பகல் நேரம் நிலவைப் பார்த்தது
நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது
ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்

சேலை சூடி ஒரு சோலை போல
வழி பூக்கள் சிந்தி விழுமோ?
பாறையான மனம் ஈரமானதடி
பார்வை தந்த வரமோ?
பாதம் பட்ட இடம் சூடு கண்டு
உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட
மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானைத் தேடி சென்றது
ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது
மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது
நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ ஒஒ
ஓஹோஹொ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists