Kishore Kumar Hits

Keiron Pranab - Sera Kana lyrics

Artist: Keiron Pranab

album: Sera Kana


கனவே நீ காயம் கண்ட தேனோ
நினைவில் தடுமாற்றமானதோ
உயிரே நீ பிரிந்து சென்ற தேனோ
மனதில் சிறு வலியை கண்டதோ
உன் வாசம் வந்த கணத்தில் என் உயிரை உணர்ந்த கணத்தில்
உன் வாசம் மீண்டும் என்னைக் கடந்து
உயிரை பறித்து போனது
வலிகள் பல மடங்கானதே
மனதின் கனம் ரணமானதே
கடலில் இருக்கும் மீன்கள் கரையை சேர கனவா
அந்தக் கரையை சேர முயன்றால் உயிர் வாழுமா
என் நிலைமை என்ன தெரிந்தும்
உன் மனதை சேர கனவா
அந்தக் கனவு கலைந்த பிறகும் உயிர் வாழ்வேனா
உன் விழி சேர நினைத்தேன்
கரம் கோர்க்க நினைத்தேன்
உன் மடி மீது தலை சாய நினைத்தேன்
காலங்கள் முழுதும்
அன்பெனும் நிழலில்
நாம் சேர்ந்து வாழ்ந்திட நினைத்தேன்
நீ விரும்பும் ஒரு மனம்
வேறொவருடையதால்
எதிர்பார்த்த என் மனம் அது நொறுங்கி உடைந்தது
இருந்தும் என் விழியில் சிறு இன்பம் காண்கிறேன்
எதிர்பார்த்த எந்தன் நாட்கள்
நான் காத்திருந்த நொடிகள்
இன்று காற்றில் கலந்து போனால்
உயிர் வாழ்வேனா
கடலில் இருக்கும் மீன்கள் கரைசேர கனவா
அந்தக் கரையை சேர முயன்றால்
உயிர்வாழுமா
என் நிலைமை என்ன தெரிந்தும்
உன் மனதை சேர கனவா
அந்தக் கனவு கலைந்த பிறகும் உயிர் வாழ்வேனா
கனவே நீ காயம் கண்ட தேனோ
நினைவில் தடுமாற்றமானதோ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists