Kishore Kumar Hits

Prakash Nikki - Senganthal lyrics

Artist: Prakash Nikki

album: Rowthiram (Orignal Motion Picture Soundtrack)


செங்காந்தல் கையாலே
உயிரைத் தொட்டுப் போனாள்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப் போனாள்
ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப் போனாள்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசை மூட்டிப் போனாள்
பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப் போனாலே
பல முறை அவளைப் பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே
ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே தீண்டிச்சென்றாள்
செங்காந்தல் கையாலே
உயிரைத் தொட்டுப் போனாள்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப் போனாள்
ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப் போனாள்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசை மூட்டிப் போனாள்

ஏதோப் போல ஆனேன்
எதனாலே மாறிப்போனேன்
எமன் போலே கொல்லும் பார்வை
எனை உறசும்போதும் உயிர் வாழ்கிறேன்
அட யாரை தாண்டும் பொழுதும்
ஏதும் தோன்றிடாது
அவளைப் பார்க்கும் பொழுது
என் கால்கள் தாண்டிப்போகாது
நேற்றுப்பார்த்த நிலா
எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று
என் கைகள் நீட்டும் தூரம்
காற்றில் போகும் இலையானனே
ஏனோ நானும்
தூக்கிப்போனாய் என்னை
எங்கேயோப் போனேன் நானும்
தேடி தினம் தேடி
உடை உடுத்திடும் மாற்றம்
தந்தாள் தந்தாள்
மாயம் இது தானோ
என் நிழலுக்கும்
வண்ணம் ஏன் வந்ததோ
செங்காந்தல் கையாலே
உயிரைத் தொட்டுப் போனாள்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப் போனாள்
ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப் போனாள்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசை மூட்டிப் போனாள்

கூட்டம் கூடும் சாலை
விரல் கோர்த்து போகும் வேளை
பலர் பார்த்து போகும் போதும்
அது தனிமை போல ஏன் தோன்றுதோ
அவள் கூந்தல்ஆட தானே
தோளில் மேடை கேட்ப்பேன்
மெலிதாய் தீண்டும் போது
சிறிதாக கர்வம் கொள்வேனே
தீயில் செய்த கண்கள்
என் நெஞ்சை எட்டி பார்க்கும்
பூவில் நெய்த கைகள்
ஏதேதோ என்னை கேட்க்கும்
வானவில்லின் ஏழு
வண்ணம்தான் சாயம் போகும்
வெள்ளை மேகம் அவள்
எல்லோரா தோற்று போகும்
ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே
தீண்டிச்சென்றாள்
பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப்போனாலே
பல முறை அவளைப்பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே
வானம் அதன் தாகம்
கடல் குடித்திடும் காலம்
வந்தாள் வந்தாள்
நேரம் வெகுநேரம்
உடன் நடந்திடும் ஆசை
தந்தாள் அவள்
செங்காந்தல் கையாலே
உயிரைத் தொட்டுப் போனாள்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப் போனாள்
ஓ, ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப் போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசை மூட்டிப் போனாய்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists