அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் குமுதங்களாய் மலர்ந்தேன் நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன் விழி இரண்டும் புதிது இமை இரண்டும் புதிது கனவுகளோ இனிது கடைவதெல்லாம் அமுது மரகத ராகங்கள் மணி விழி தீபங்கள் மறந்திடுமா நம் கோலங்கள் ♪ தனனோம் தனனன திரனா தன தீம் தீம்தனோம் தனனோம் தனனன திரனா தன தீம் தீம்தனோம் வீட்டில் வீசிட கண்டேன் சாமந்தி பூ வாசம் காற்றிலே மோதிர மாற்றம் கல்யாண ஆவேசம் காலங்கள் நேரங்கள் எல்லாம் கடிகார கூப்பாடு நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும் பேராசை தீராது வலிப்பது போல் தோன்றும் இனிப்பதுதான் எனும் கனவுலகில் இல்லா சுகம் அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் ♪ பார்வை போகிற தூரம் நீ அன்றி யார் வேண்டும் பாவை ஊன் உயிர் எங்கும் உன்னோடு ஒன்றாகும் ஆகாயம் பார்கிறதென்று மழை கொஞ்சி பேசாதா ஆடைக்கும் வேர்கிறதென்று பனி காற்று வீசாதா ஒரு கரை நீயாக மறு கரை நானாக கரை புரண்டே ஆறாகினோம் அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன் குமுதங்களாய் மலர்ந்தேன் நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன் விழி இரண்டும் புதிது இமை இரண்டும் புதிது கனவுகளோ இனிது கடைவதெல்லாம் அமுது மரகத ராகங்கள் மணி விழி தீபங்கள் மறந்திடுமா நம் கோலங்கள்