மஞ்சள் மணமணக்க அங்காளம்மா (பாடல் வரிகள்)
சொற்பிழையை தயவு செய்து திருத்தி படிக்கவும்
மஞ்சள் மணமணக்க அங்காளம்மா
தாயி மருளாடி ஓடி வரா ஒய்யாரமா (-2+1பெண் தடவை)
(பெண்)மலையாம் மலையழகி அங்காளம்மா
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா (1+1 கோரஸ் தடவை)
கருத்த சடை விரித்து காபாலம் தான் எடுத்து
சித்தாங்கு கட்டிக்கிட்டு தீ சட்டி ஏந்திக்கிட்டு
பம்பை சிலம்பொலிக்க பாம்பாட்டம் ஆடிகிட்டு
அங்கம் குலுங்கிடவே ஆனந்தமே போட்டு கிட்டு
மஞ்சள் மணமணக்க அங்காளம்மா
தாயி மருளாடி ஓடி வரா ஒய்யாரமா (-2 தடவை)
(பெண்) மலையாம் மலையழகி அங்காளம்மா
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா (2 தடவை)
அஞ்சு தலை நாகம் வந்து குடை பிடிக்கும்
எங்க அங்காளி பேரை சொன்னா அருள் கிடைக்கும் (2 தடவை).
(பெண்)பத்து தலை நாகம் வந்து படை எடுக்கும்
அது பக்தரது (படுத்தி எடுத்து?) அருள் கொடுக்கும்
பூங்காவனதினிலே குடியிருப்பா - அவ
புத்துக்குள்ள நாகமாக வடிவெடுப்பா
புத்த விட்டு வெளிய வந்து ஆடிடுவா ... 2
அவ பூமுடியில் இறங்கி விளையாடிடுவா - அம்மா
மஞ்சள் மணமணக்க அங்காளம்மா
தாயி மருளாடி ஓடி வரா ஒய்யாரமா - 1+1 தடவை)
மலையாம் மலையழகி அங்காளம்மா (கோரஸ்)
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா (-1+1 தடவை)
பாம்பு கண்ணி நீலியடி அங்காளம்மா
உன் பக்தருக்கு காவலராய் சிங்காரமா (2 தடவை)
(பெண்) கருநாக வடிவெடுத்து அங்காளம்மா
அவ கருவறையில் காட்சி தர வாராளம்மா
கஞ்சுழியா? வேஷமிட்டு அங்காளம்மா
அவ காபால சூலம் ஏந்தி வாராளமா -2
(பெண்) அக்கினிய ஏந்திக்கிட்டு அங்காளம்மா
அங்கம் குலுங்கி அவ ஆடிக்கிட்டு வாராளமா
மஞ்சள் மணமணக்க அங்காளம்மா
தாயி மருளாடி ஓடி வரா ஒய்யாரமா (2தடவை)
(பெண்) மலையாம் மலையழகி அங்காளம்மா
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா (1+1 கோரஸ் தடவை)
அம்மா ... உனக்கு நடல சுடலை வனம் ...(சொல் இழுவை)
நடு சுடல ... தில்லை வனம்
அந்த தில்லை வனத்தை விட்டு ...(சொல் இழுவை)
அம்மா நீ சீக்கிரமே ...வாடியம்மா
நாக வடிவெடுத்து நடலையாடும் காளியம்மா
நீ சூல வடிவெடுத்து.(சொல் இழுவை)...அம்மா
நீ சுற்றி விளையாடிடம்மா -
தாயே .!
சித்தாங்கு காரி அவ அங்காளம்மா -அவ
சிங்கரதம் ஏறி வாரா ஒய்யாரமா
சிற்றுடுக்கை ஓசைகேட்டு அங்காளம்மா -அவ
சிர மாலை போட்டு வரா சிங்காரமா
அண்டம் நடுங்கிடவே அங்காளம்மா -அவ
ஆனந்தமா ஆடிவரா ஒய்யாரமா
அங்கம் குலுங்கிடவே அங்காளம்மா -அவ
அங்காளியாய் ஆடி வரா சிங்காரமா
(குலவை)
சூறையாடும் வேளையிலே அங்காளம்மா - அவ
கூரையிடும் நேரத்திலே வந்தாளம்மா
சூலமதை ஏந்திக்கிட்டு அங்காளம்மா - அவ
சுட்டெலும்பை தேடிகிட்டு வாராளம்மா
காட்டு கூச்சல் போட்டு கிட்டு அங்காளம்மா - அவ
கபாலத்தை ஏந்திக்கிட்டு வாராளம்மா
கருத்த சடை விரித்து அங்காளம்மா - அவ
காளியாக உருவெடுத்து வாராளம்மா
(குலவை)
மஞ்சள் மணமணக்க அங்காளம்மா
தாயி மருளாடி ஓடி வரா ஒய்யாரமா (- 2தடவை)
(பெண்) மலையாம் மலையழகி அங்காளம்மா
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா -
மலையாம் மலையழகி அங்காளம்மா 1 தடவை
மேல் மலையனூர் ஆடி வரா ஒய்யாரமா (கோரஸ் 4 தடவை)
Поcмотреть все песни артиста
Other albums by the artist