கோயில் சுத்தி தானே ஊர் இருக்கும் அங்க குளம் இருக்கும் நில புலன் இருக்கும் ஆடி பாட அங்கே இடம் இருக்கும் கல் தூண் இருக்கும் கோயில் மணி இருக்கும் முப்பாட்டன் காலத்து பொருள் இருக்கும் வரலாறு இருக்கும் பெரும் தேர் இருக்கும் வானம் முட்டும் கோபுரம் பல இருக்கும் நாலு கொரங்கு இருக்கும் ஸ்தல மரம் இருக்கும் வானம் முட்டும் கோபுரம் பல இருக்கும் நாலு கொரங்கு இருக்கும் ஸ்தல மரம் இருக்கும் இதை பாதுகாக்க மனம் தான் வரவில்லையே வரவில்லையே பொறுப்பு எனதுன்னு நெனைக்கலையே நெனைக்கலையே நெஞ்சு பொறுக்கலையே கோயில் புகழ் எல்லாம் மண்ணோடு மண்ணாகுதே நெஞ்சு பொறுக்கலையே நம்கண் முன்னே பாழாகும் நெலை ஆகுதே ♪ வீதிக்கொரு கோயில் ஒன்னிருக்கும் சாமி சிலை இருக்கும் உணரும் நெலை இருக்கும் குல தெய்வம்முன்னு ஒன்னு இருக்கும் வேண்டுதல் இருக்கும் விரதம் இருக்கும் நெஞ்சுக்குள்ள பக்தி நெறஞ்சுருக்கும் பூச இருக்கும் பல சடங்கு இருக்கும் கடவுள் கும்பிட்டு தானே நம் நாள் தொடங்கும் அங்கு அருள் இருக்கும் சாமி துணை இருக்கும் கடவுள் கும்பிட்டு தானே நம்ம நாள் தொடங்கும் அங்கு அருள் இருக்கும் சாமி துணை இருக்கும் பூசை எல்லாம் இப்போ நடக்கலையே நடக்கலையே சாமிக்கும் சோறு படைக்கலயே படைக்கலயே நெஞ்சு பொறுக்கலையே கோயில் புகழ் எல்லாம் மண்ணோடு மண்ணாகுதே நெஞ்சு பொறுக்கலையே நம்கண் முன்னே பாழாகும் நெலைஆகுதே நெஞ்சு பொறுக்கலையே இனியும் பொறுத்திடும் நாள் போகுதே நெஞ்சு பொறுக்கலையே இந்த நிலையை நம் சரி செய்யும் நாள் வந்ததே