எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே இந்த ஞாயம், அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே இந்த ஞாயம், அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே ♪ பச்சைக்கிளிக்கொரு வெல்லப்பொடவையே தரவிடுவேனா கோயில் சிலை ஒன்னு குப்பையிலே செல்ல விட்டுவிடுவேனா ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா உண்மை சொல்லப்போனா வம்புவழக்கா அறிவுக்குமேலே சக்தி இருக்கா, அன்புக்குமேலே பக்தி இருக்கா எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே இந்த ஞாயம், அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே ♪ சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும் சக்தியாம் தோற்காது சாதி சனம் இங்கு சந்தியே பேசட்டும் தர்மங்கள் சாகாது உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன் குங்குமத்தை நானா கொள்ளை அடிப்பேன் நல்லவழி கண்டு நலம் கொடுப்பேன் உள்ளபடி பெண்ணே உயிர்கொடுப்பேன் எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே இந்த ஞாயம், அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே