தந்தானைத் துதிப்போமே
திருச்சபையோரே கவி பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
தந்தானைத் துதிப்போமே
♪
ஒய்யாரத்துச் சீயோனே
நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்
தந்தானைத் துதிப்போமே
♪
கண்ணாரக் களித்தாயே நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
தந்தானைத் துதிப்போமே
♪
சுத்தாங்கத்து நற்சபையே
உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
தந்தானை துதிப்போமே
Поcмотреть все песни артиста
Other albums by the artist