ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை
ஞானரட்சகர் நாதர் நமை
இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார்
புகழ் ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
♪
சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் இரட்சகரேசு நமை
எங்கள் இரட்சகரேசு நமை
வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்
புகழ் ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
♪
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும்
தந்து நமக்குயிருடையுணவும்
வெகு தயவுடன் இயேசு தற்காத்ததினால்
புகழ் ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
♪
பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை
இத் தரைதனில் குறை தணித்தாற்றியதால்
புகழ் ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஆனந்தமே, ஜெயா ஜெயா
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
Поcмотреть все песни артиста
Other albums by the artist