உந்தன் கண்களில் என்னடியோ மின்னல் மின்னிடும் ஓர் கனவோ வண்ண கனவில் வந்தது யார் ஏதோ சின்னவர் என்பவரோ கன்னம் ரெண்டில் சின்னம் என்ன உந்தன் என்னவர் தந்ததுவோ ♪ கொஞ்சம், கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார் வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார் உடல் விட உள்ளம் தொட உன்னோடு ஒன்றாடும் மன்றாட பக்கம் வர வெட்கம் வர நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட உன் விழியில் நான் இருந்தால் வேற என்ன வேண்டுமடி ♪ கருந்திரை கூந்தளினை அல்லி காதருகே ஆசையினை சொல்லி காத்திருக்கும் காதலனை தள்ளி சிவந்திடும் கன்னங்களை கிள்ளி செல்ல திட்டு திட்டுவதால் அச்சத்தில் நான் ஓடி போவேனோ முத்தம் ஒன்று வேண்டும் என்று கேட்டால் நான் வேறென்ன செய்வேனோ ஈருடலில் ஓர் உயிராய் நாம் இனி மாறிடுவோம்